Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/வேப்பந்தட்டை யூனியன் வளர்ச்சி பணி: பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு

வேப்பந்தட்டை யூனியன் வளர்ச்சி பணி: பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு

வேப்பந்தட்டை யூனியன் வளர்ச்சி பணி: பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு

வேப்பந்தட்டை யூனியன் வளர்ச்சி பணி: பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு

ADDED : மே 21, 2010 03:22 AM


Google News

பெரம்பலூர்: வேப்பந்தட்டை பஞ்சாயத்துக்குட்பட்ட அன்னமங்கலம், அரசலூர், வெண்பாவூர், பாண்டகபாடி ஆகிய பஞ்சாயத்துகளில் நடந்து வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வுகளின்போது வேப்பந்தட்டை கிராமத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ள சிறு விளையாட்டு அரங்கத்துக்கான இடம், அன்னமங்கலம் கிராமத்தில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் குளம் மற்றும் படித்துரை அமைக்கப்பட உள்ளதை பார்வையிட்டார்.



சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் மக்களின் பங்களிப்பான மூன்று லட்சத்து 67 ஆயிரம் ரூபாயுடன் மொத்தம் 11 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் மூன்று வகுப்பறை கொண்ட கட்டிடத்துக்கான பணிகளையும், அப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தையும் கலெக்டர் விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதைத்தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் இருபது லட்சம் மதிப்பில் அம்மன் கோயில் ஏரி ஆழப்படுத்தும் பணி 123 பணியாளர்களை கொண்டு நடந்து வருவதை பார்வையிட்டு பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் வழங்கப்படும் ஊதியம் குறித்து கேட்டறிந்தார்.பாண்டகப்பாடி முதல் அரிஜனகாலனி வரையில் பாரத பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 59 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 2.10 கிலோ மீட்டர் தார்சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us